கடலூரில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் முறை அறிமுகம்: 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாய குழுவினர் பங்கேற்பு..!!!

கடலூர்: விவசாயிகள் ஒன்றிணைந்து, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உருவாக்கும் முறை கடலூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில்,  நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், 3-வது பிரிவின் படி விவசாயிகள் ஒன்றிணைந்து தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உருவாக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களை, எப்படி சந்தைப் படுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது.

இதில் 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாய குழுவினர் கலந்து கொண்டனர். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை இங்கு கொண்டு வந்த நிலையில்,  அதனை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களும் இங்கு வந்தனர். இதுபோன்ற நேரடியாக வேளாண் உற்பத்திப் பொருட்கள் கிடைக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன்,  நேரடி வாய்ப்புகளும் அதிகரிக்கும், மேலும்  மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனையாளர்களிடம் சந்தித்து விற்கும் நிலையில், பொதுமக்களுக்கும் தரமான பொருட்கள் உடனடியாக நேரில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Related Stories: