×

என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி நீராவி முருகன் யார்?: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகன் முருகன்(45). இவண் தனது மனைவி, குடும்பத்துடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தான். ஏழ்மையான குடும்பம் அதேநேரம் சலூன்கடை தொழிலாளி மகனாக இருந்த முருகன் தான் பெரிய ஆளாக வரவேண்டும் என்று திட்டமிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தில் கொடிக்கட்டி பறந்த பிரபல ரவுடி ஒயின்ஸ் சங்கர் என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டான்.

பிறகு ரவுடி ஒயின்ஸ் சங்கருக்காக கள்ளச்சாராயம் கடத்துவது மற்றும் பல காரியங்களை முருகன் செய்து வந்தான். இதனால் ஒயின்ஸ் சங்கர், முருகனின் விசுவாசத்தை பார்த்து தனது வலது கரமாக வைத்துக்கொண்டார். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒயின்ஸ் சங்கர் பெயரை தன்னுடைய மார்பில் முருகன் பச்சை குத்தி கொண்டான்.

ஒயின்ஸ் சங்கரின் வலது கரமாக இருந்ததால் முருகனை செல்லமாக ‘நீராவி’ என்று அவனுடைய ஊர் பெயரை அடைமொழியாக வைத்து அழைத்து வந்தனர். பிற்காலத்தில் அதுவே ‘நீராவி முருகன்’ என்று பிரபலமானான். இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்பனையில் கொம்பன் குழுவுக்கும், ஒயின்ஸ் சங்கர் கோஷ்டியான கொப்பரை குழுவுக்கும் இடையே, யார் பெரியவர்கள் என்று மோதல் வெடித்தது. இதில் நடந்த மோதல்களில் கயத்தாறு பகுதியில் கொம்பனை கொலை செய்ய ஒயின்ஸ் சங்கர் திட்டமிட்டார். இந்த தகவல் கொம்பன் குழுவிற்கு தெரியவந்தது. உடனே கொம்பன் கோஷ்டியினர், கொப்பரை குழுவின் முக்கிய நபராக வலம் வந்த ரவுடி ஒயின்ஸ் சங்கரை வெட்டி கொலை செய்தனர்.

அதன் பிறகு வலது கரமாக இருத ‘நீராவி முருகன்’ ரவுடி ஒயின்ஸ் சங்கர் இடத்திற்கு வந்தான். அதன் பிறகு தனக்கு என ஒரு முத்திரையை ரவுடி நீராவி முருகன் தூத்துக்குடி மாவட்டத்தில் உருவாக்கினான். கள்ளச்சாராய வழக்கில் போலீசார் தேடிய போது, செலவுக்காக நீராவி முருகன் வழிப்பறியில் ஈடுபட தொடங்கினான். அந்த வகையில் அவன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், 2002ல் தான் நீராவி முருகன் மீது போலீசார் முதல் வழிப்பறி வழக்கு பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவன் தூத்துக்குடியை சேர்ந்த அசோக் என்ற ரவுடி கோஷ்டியில் சேர்ந்து, தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருந்த ஏ.சி.அருணாவை கூட்டாளிகளுடன் ேசர்ந்து கொடூரமாக கொலை செய்தான். அதை தொடர்ந்து திருப்பூரில் நகை பறிப்பில் ஈடுபட்ட போது சிறுமியை கழுத்தை தனது நகத்தாலேயே அறுத்து கொடூரமாக கொலை செய்தான். பிறகு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளி ஒருவரை வெட்டி கொலை செய்தான். இதன் மூலம் நீராவி முருகன் தென் மாவட்டங்களில் பிரபலமாக பேசப்பட்டான். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ரவுடி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினான்.

கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பிக்க நீராவி முருகன் மொட்டை அடித்து கொண்டு, வழிப்பறி மற்றும் கொள்ளையில் கிடைத்த பணம் மற்றும் நகைகளை எடுத்து கொண்டு கல்லூரி மாணவன் போல் சென்னைக்கு வந்து நட்சத்திர ஓட்டல்களில் சிறிது நாட்கள் தங்கி சென்றுள்ளான்.

போலீசாரிடம் சிக்காமல் இருக்க, அடிக்கடி தனது செல்போன் மற்றும் சிம்கார்டுகளை மாற்றி வந்துள்ளான். அந்த வகையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட செல்போன்கள் மாற்றியுள்ளான். நண்பர்கள், உறவினர்கள் பெயர்களில் 80க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி பயன்படுத்தியுள்ளான். ஒரு குற்ற சம்பவத்திற்கு ஒரு சிம்கார்டுதான் பயன்படுத்துவான். கொள்ளையடித்த பணத்தில் விதவிதமான விலை உயர்ந்த ஆடைகள், ஷூக்களை வாங்கி பயன்படுத்தி வந்தான்.

எப்போது சென்னைக்கு வந்தாலும் கொள்ளையடித்த பணத்தில் 50 சதவீதத்தை நடிகைகளுக்கு வாரி வழங்கி உல்லாசமாக இருந்துள்ளான். அந்த வகையில் சென்னையில் மட்டும் நீராவி முருகனுடன் 80க்கும் மேற்பட்ட நடிகை மற்றும் துணை நடிகைகள் பழக்கத்தில் இருந்துள்ளனர். தன்னுடன் உல்லாசத்திற்கு வரும் நடிகைகளுக்கு பணத்தை வாரி வழங்குவதோடு பிடித்து விட்டால். அந்த நடிகைக்கு நகைகளை அன்பளிப்பாக தருவான். இதனால் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் எப்போது அழைப்பான் என்று காத்திருப்பார்கள் என்று நீராவி முருகனின் நெருங்கிய கூட்டாளிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு வந்தால் வளசரவாக்கம், வடபழனி, போரூர், விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் தான் அறை எடுத்து தங்குவது வழக்கம். இதற்கு காரணம் அந்த பகுதிகளில் தான் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் அதிகம் என்றும் அவனது கூட்டாளிகள் கூறியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு விட்டு சென்னைக்கு வந்து தலைமறைவாக இருப்பது அவனது வழக்கம். 2011 முதல் 2015 வரை பல்வேறு வழக்கில்  போலீசாரிடம் சிக்காமல் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி  இருந்தான். பிறகு நீராவி முருகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு  தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் தான்,  2015 டிசம்பர் 19ம் தேதி, சென்னை துரைப்பாக்கத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ஆசிரியை வேலம் என்பவரிடம் 14 சவரன் செயினை நீராவி முருகன் நண்பர் அரிக்கிருஷ்ணனுடன் சேர்ந்து வழிப்பறி செய்தான்.
வெளிமாவட்டங்களில் போலவே இங்கும் சர்வசாதாரணமாக வழிப்பறியில் ஈடுபட்டுள்ளான். ஆனால் ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபடுவதை வீட்டு மாடியில் இருந்த இளம்பெண் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து  வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்துவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை சற்றும் எதிர்பார்க்காத நீராவி முருகன், கூட்டாளியுடன் தலைமறைவானான். அந்த வீடியோ காட்சி ஆதாரத்தின்படி, தனிப்படையினர் 2016 ஜனவரி 26ம் தேதி  திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் அவனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த நீராவி முருகன், 2018ல் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் விவசாயி சக்திவேலை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவானது. பின்னர் டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் பதுங்கி இருந்த நீராவி முருகன் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி  நீராவி முருகன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

அவன் மீது தூத்துக்குடி, திண்டுக்கல், திருப்பூர், நெல்லை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை என மாநிலம் முழுவதும் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் காய்ச்சியது, வழிப்பறி, திருட்டு என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

சென்னையில் மட்டும் திருவான்மியூர், துரைப்பாக்கம், வளசரவாக்கம், ராயலாநகர், விருகம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், தண்டையார் பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், போரூர் காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது. தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை போலீசார் ரவுடி நீராவி முருகனை பல முறை கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 முறைக்கு மேல் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டுள்ளான்.

Tags : Niravi Murugan , Who is the famous rowdy Niravi Murugan encountered ?: Sensational information about the background
× RELATED என்கவுன்டரில் சுட்டுக் கொலை ரவுடி...