×

தேர்தல் காலங்களில் பாஜகவுக்கு ஆதரவான செய்திகளை பேஸ்புக்கில் பதிவிட்ட ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனம் : ஆய்வில் அதிர்ச்சி!!

மும்பை ; தேர்தல் காலங்களில் பாஜகவுக்கு ஆதரவான செய்திகளை பேஸ்புக்கில் பரப்புவதற்காக ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனம் செயல்பட்டு இருப்பது ஆய்வு அறிக்கையில் அம்பலம் ஆகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்கள் குறித்து ஆட் வாட்ச் அமைப்புடன் இணைந்து தி ரிப்போர்ட்டர்ஸ் கலக்ட்டிவ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2020ம் ஆண்டு நவம்பர் வரையிலான கால கட்டத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட 5,36,070 அரசியல் சார்ந்த விளம்பரங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த சமயத்தில் நடைபெற்ற 9 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு பயன்தரும் வகையில், பேஸ்புக் செயல்பட்டது இந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை குறித்து அல் - ஜஷீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் காலத்தில் உண்மையற்ற தகவல்களை பரப்பியதாக காங்கிரசுக்கு ஆதரவாக 687 பக்கங்களை நீக்கிய பேஸ்புக் நிறுவனம், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 1 பேஸ்புக் பக்கத்தையும் 16 கணக்குகளை மட்டுமே நீக்கியதாகவும் அதுவும் சில்வர் டச் என்ற பெயரில் இயங்கிய ஐ.டி. நிறுவனத்தின் கணக்கு என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நியூ ஜே என்ற பக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரையிலான 3 மாதங்களில் சுமார் 170 அரசியல் சார்ந்த விளம்பரங்களும் 10 தேர்தல்களை உள்ளடக்கிய 22 மாதங்களில் 718 அரசியல் விளம்பரங்களும் இந்த பக்கத்தால் பகிரப்பட்டு இருந்தன.

அவை மிகப்பெரும்பாலும் பாஜக வேட்பாளர்களை புகழ்ந்தும் மோடியை பாராட்டியுமே இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்த நியூஜே நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தின் நிதியிலேயே இயங்குவதாக இந்த ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது. நியூஜே நிறுவனத்தின் நிறுவனர் ஷலப் உபாத்யாய் ரிலையன்ஸோடும் பாஜகவோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். 


Tags : Reliance Group ,Bajhaha , BJP, Facebook, Reliance Group, subsidiary
× RELATED சென்னை அம்பத்தூரில் 10 ஏக்கர்...