×

திருவண்ணாமலை பௌர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பௌர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில், அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதில் ஒன்று கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனை பின்பற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், பௌர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் தற்போது ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பெளர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டு, அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த மாத பெளர்ணமி தினங்களான 17,18-ம் ஆகிய தினங்களில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்ட கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Griwalam ,Thiruvannamalai Bournami days , Lifting of the ban on going to Kiriwalam on Thiruvannamalai Full Moon Days: District Collector
× RELATED திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்