கர்நாடக அரசை கண்டித்து டி.டி.வி. தினகரன் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி: மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகளுடன் இணைந்து டி.டி.வி.தினகரன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் திருச்சி அமமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று பேசுகையில், மேகதாதுவில் அணையை கட்ட அனுமதித்தால் தமிழகம் சோமாலியா நாடாக மாறிவிடும். தற்போது தமிழகத்தில் நிலத்தடி நீர் வற்றி வருகிறது. அதை அதிகப்படுத்த வழிவகை செய்ய வேண்டும். காடு வளர்ப்பு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழக மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்க கூடாது என்றார்.

இதற்கிடையே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்பட 1,200 பேர் மீது கோட்டை போலீசார் நேற்று மாலை வழக்குப்பதிந்துள்ளனர்.

Related Stories: