×

தரவுகள் கசிவா? பேடிஎம் வங்கி விளக்கம்

புதுடெல்லி: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி  இனி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது. அந்த வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவை தணிக்கை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. ரிசர்வ் வங்கியின் வருடாந்திர ஆய்வில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சர்வர்கள் சீனாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் நிறுவன சர்வர்களுக்குப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இந்தச் சீன நிறுவனம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் மறைமுகமாகப் பங்குகளை வைத்துள்ளது என்று செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பேடிஎம் வங்கி சீன நிறுவனங்களுக்குத் தரவு கசிவு என்று ப்ளூம்பெர்க் கூறுவது முற்றிலும் தவறானது.இது வெறுமனே பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சி. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி முற்றிலும் இந்தியாவில் வளர்ந்த வங்கி என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் தரவு உள்ளூர் மயமாக்கல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியுள்ளோம்அனைத்து தரவுகளும் இந்தியாவிற்குள்ளேயே தான் உள்ளன. என்று தெரிவித்துள்ளது.

Tags : BDM Bank , Data leaked? BDM Bank Description
× RELATED பேடிஎம் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை