×

சபாநாயகர் செல்வம் முன்னிலையில் மணவெளி புதுக்குப்பம் கடலில் 500 ஆமை குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

புதுச்சேரி :  புதுச்சேரி அரசின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனத்துறை சார்பாக மணவெளி புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆமை முட்டைகளை பாதுகாத்து குஞ்சு பொரிக்கவைத்து, அந்த ஆமை குஞ்சுகளை நேற்று காலை 7 மணியளவில் கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் செல்வம் முன்னிலையில் புதுக்குப்பம் கடற்கரையில் 500க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

நிகழ்ச்சியில் வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி, துணை இயக்குனர் குமரவேல், நிர்வாக அதிகாரி பிரபாகரன், வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வெங்கடேசன், கிருஷ்ணசாமி, தணிகைவேல் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகம், ரமேஷ், அய்யனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Manaveli ,Speaker ,Selvam , Pondicherry: A tortoise found at Manaveli Pudukkuppam beach area on behalf of the Pondicherry Government's Wildlife Conservation and Forest Department.
× RELATED காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில்...