×

உக்ரைனில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு.! 60 பேர் படுகாயம்

கீவ்: உக்ரைனில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசியதில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 18 வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.  ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  

போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். எனினும், ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷிய படைகள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக லிவிவ் நகரில் உள்ள லிவிவி மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.


Tags : Russia ,Liviv city, Ukraine , Russian airstrikes on a military base in Lviv, Ukraine; 35 dead! 60 people were injured
× RELATED ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி