மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக லட்சுமி நகர் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக லட்சுமி நகர் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆற்காடு சாலையில் நடைபெறும் போரூர் மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணிகளை முன்னிட்டு லட்சுமி நகர் முதல் போரூர் மேம்பால சந்திப்பு வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக (4 வது போக்குவரத்து தடம்) ஏற்கனவே சோதனை முறையில் அமலில் உள்ள போக்குவரத்து மாற்றம் தொடர்வதற்காக 60 நாட்கள் அதாவது, 14ம் தேதி (நாளை) முதல் 12.5.2022 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வியபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மெட்ரோ ரயில் பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் போக்குவரத்து காவல் துணை ஆணையர் இணையதள முகவரியான dcpavadi.traffic.com-க்கு அனுப்பலாம். அதேபோல் கட்டுமான பணி அதிகாரியின் shankar.p@intecc.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். அதேபோல், ஆவடி காவல் உதவி ஆணையரின் 8056217958 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: