×

ராகுல், பிரியங்காவுக்கு எதிராக கருத்து அமெரிக்கை நாராயணனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் அமெரிக்கை வி.நாராயணன். இவர் தமிழக காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், தோல்விக்கு ராகுல், பிரியங்கா தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அமெரிக்கை நாராயணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,“காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் தலைமை குறித்து உள்ளரங்கில் கூற வேண்டிய கருத்துகளை பொது வெளியில் ஊடகங்கள் வாயிலாக தாங்கள் கூறி வருகிறீர்கள். சமீபத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நீங்கள் கூறிய கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இதன் அடிப்படையில் தங்களை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்ககூடாது என்பதற்கு இக்கடிதம் கிடைத்த ஒரு வார காலத்திற்குள் விளக்கம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கை நாராயணன் தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Narayan ,Raql ,Priyanga , Rahul issues notice against Priyanka
× RELATED திருமணிமாடக் கோயில் நாராயணன்