ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனை கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பேரூராட்சியில் குப்பையை அகற்றுவது, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை சீர் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணை தலைவர் குமரவேல், செயல் அலுவலர் மாலா, வணிகர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஊத்துக்கோட்டையின் இதயம் போன்ற பகுதியான பஜார் பகுதியில் குப்பைகளை சேரவிடாமல் காலையில் ஒரு முறையும், 11 மணிக்கு பேட்டரி வாகனம் மூலமாகவும் குப்பைகளை அகற்றுவது, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்களிடம் கூறி கட்டுப்படுத்துவது, இல்லாவிட்டால்  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.  

மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை  ஒழித்து மஞ்சப்பை பயன்பாட்டை கொண்டு வருவது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில், கவுன்சிலர் கோகுலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: