×

எல்ஐசி 5% பங்கு விற்பனைக்கு செபி அனுமதி

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆயுள்  காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை பொதுமக்கள் விற்பனைக்கு வெளியிட  செபி அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ விரைவில்  வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஒன்றிய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு  அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது.

இந்த 5 சதவீதப் பங்குகளை விற்று ரூ.78 ஆயிரம் கோடி நிதி திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில், பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் சலுகைகள் தரப்பட உள்ளது.

பங்கு வெளியீடு தொடர்பாக அளிக்கப்பட்ட 650 பக்க விவர நகல் அறிக்கையை பரிசீலித்த செபி, பங்கு விற்பனைக்கு அனுமதி வழங்க முடிவு எடுத்துள்ளது. எல்ஐசி.யின் நகல் அறிக்கைக்கு அது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், எல்ஐசி பங்குகள் விற்பனை தேதி குறித்து  ஒன்றிய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த மாதம் பங்குகள் விற்பனை வரும் என்று கூறப்பட்ட  நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால்  அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  பங்குச் சந்தைகள்  சரிவை சந்தித்து இருப்பதால் பங்கு வெளியீட்டை  தள்ளி வைப்பதே நல்லது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Sepi ,LIC , SEBI approves sale of 5% stake in LIC
× RELATED பீர் வாங்கி கொடுக்காததால் ஆத்திரம் எல்ஐசி ஊழியரை தாக்கிய 5 பேர் கைது