×

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்-செக்டார் ஸ்கில் கவுன்சில் இணைந்து ஆயத்த ஆடை, அலங்கார பொருள் தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் நேற்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் 12 செக்டார் ஸ்கில் கவுன்சில்கள் முறையே ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்காரம் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் அந்தந்த செக்டார் ஸ்கில் கவுன்சில் வாயிலாக அளிக்கப்படும் வேலைவாய்ப்பினை பெரும் வகையிலான குறுகிய கால பயிற்சிகள், பயிற்றுனர்களுக்கான பயிற்சி, மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி மேற்கொள்ளப்படும். செக்டார் ஸ்கில் கவுன்சிலின் சமீபத்திய தொழில்நுட்பங்கள்,வேலைகள் குறித்த தகவல்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் பகிர்ந்து கொள்ளும். செக்டார் ஸ்கில் கவுன்சில்களின் வாயிலாக வழங்கக்கூடிய பயிற்சிகளுக்கான செலவை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்கும். அதுமட்டுமின்றி உலகத்திறன் போட்டிகளில் தமிழக திறன் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வெல்ல தேவையான பயிற்சிகளை அளித்து அப்போட்டிகளுக்கு ஆயத்தம் ஆக வழிவகுக்கும்.

Tags : Tamil Nadu Skills Development Corporation ,Sector Skill Council ,Minister ,CV Ganesan , Memorandum of Understanding between Tamil Nadu Skill Development Corporation and Sector Skill Council for the manufacture of readymade garments and decorative items: Signing in the presence of Minister CV Ganesan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...