×

தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் இன்று 09.03.2022 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் 12 செக்டார் ஸ்கில் கவுன்சில்கள் முறையே ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்காரம், அழகு மற்றும் நலம், வீட்டுப் பணியாளர்கள், மின்னனுவியல் மற்றும் வன்பொருள், உணவு பதனிடுதல், நகைகள் மற்றும் கற்கள், பசுமைப் பணிகள், தோல் பதனிடுதல், மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர், ரப்பர், தொலைதொடர்பு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இவ்ஒப்பந்தத்தின் மூலம் அந்தந்த செக்டார் ஸ்கில் கவுன்சில் வாயிலாக அளிக்கப்படும் வேலை வாய்ப்பினை பெரும் வகையிலான குறுகிய காலப் பயிற்சிகள், பயிற்றுனர்களுக்கான பயிற்சி, மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி ஆகியவை மேற்கொள்ளப்படும். மேலும் செக்டார் ஸ்கில் கவுன்சில்கள் சமீபத்திய தொழில் நுட்பங்கள் மற்றும் புதியதாக எழக்கூடிய பயிற்சிகள், வேலைகள் குறித்த தகவல்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் பகிர்ந்துக்கொள்ளும். இச்செக்டார் ஸ்கில் கவுன்சில்களின் வாயிலாக வழங்கக்கூடிய பயிற்சிகளுக்கான செலவினத்தை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஏற்கும். அதுமட்டுமின்றி உலகத்திறன் போட்டிகளில் தமிழக திறன் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வெல்ல தேவையான பயிற்சிகளை அளித்து அப்போட்டிகளுக்கு ஆயத்தம் ஆக வழிவகுக்கும்.

இவ்ஒப்பந்தம் தமிழகத்தினை நாட்டின் திறன் மையமாக மாற்றியமைப்பதின் ஓர் முக்கிய முன்னெடுப்பாகும். இந்நிகழ்ச்சியின் போது செக்டார் ஸ்கில் கவுன்சில்களின் முதன்மை செயல் அலுவலர்கள், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் தறை செயலர் திரு.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப, திருமதி.இன்னசன்ட் திவ்யா, இ.ஆ.ப, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Minister ,CV Ganesan ,Department of Labor Welfare and Skills Development , Department of Labor, Welfare Development, Contracts, Signing
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...