மேற்குவங்கம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உடன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு

கொல்கத்தா: மேற்குவங்கம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உடன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார். மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேற்கு வங்காள சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்ற முடியாத அளவுக்கு எதிர்கட்சியான பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வன்முறை நடைபெற்றதாக கூறி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட அம்சங்கள் எதும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

Related Stories: