×

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 292 பேர் பாதிப்பு, ஒருவர் உயிரிழப்பு; 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,333. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,08,373. இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 209 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 264 தனியார் ஆய்வகங்கள் என 333 ஆய்வகங்கள் உள்ளன.

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,950.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 6,45,57,853.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 53,194.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 34,50,333.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 292.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 83.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 984

* தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 163 பேர். பெண்கள் 129 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 778 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 34,08,373 பேர்.

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் இன்று ஒருவர் பேர் உயிரிழந்தனர். ஒருவர் அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,010 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9065 பேர் உயிரிழந்துள்ளனர்.

* முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.


Tags : Tamil Nadu , In Tamil Nadu, corona, vulnerability, death
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...