×

3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எலும்பு புற்றுநோயில் இருந்து குணமடைந்த 8 வயது சிறுவன்: அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சாதனை

சென்னை: ராமநாதபுரத்தைச்  சேர்ந்த சிறுவன் அகிலன். இவனுக்கு இடது  காலில் அண்மை கீழ்க்கால் எலும்பு புற்றுநோய் இருப்பது  உறுதிசெய்யப்பட்டது. இதற்கு சிகிச்சை பெற அப்போலோ புரோட்டான் கேன்சர்  சென்டருக்கு அவனை அழைத்து வந்தனர்.  பரிசோதனைக்குப் பிறகு  கீமோதெரபி சிகிச்சை தரப்பட்டது. முழங்காலுக்கு கீழே 0.5 செ.மீ.  அளவுக்கு புற்றால் பாதிக்கப்படாத இயல்பான, எலும்புப்பகுதி இருப்பது  அறியப்பட்டது.  எனவே, அவனது முழங்கால் மூட்டை பாதுகாப்பதற்காக புற்றுநோய்  பாதித்த எலும்பை அகற்ற அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது.  

இதுகுறித்து, அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மருத்துவ இயக்குனர் ராகேஷ் ஜலாலி கூறியதாவது: 3டி  பிரிண்டிங் உத்தியைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் செய்யப்பட்ட முதல்  அறுவைசிகிச்சை நிகழ்வு இதுவே.  எமது மேம்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான  சிகிச்சைகளுக்கு மிகச்சிறந்த சாட்சியமாக இது இருக்கிறது.  பல்வேறு  சிக்கல்கள் இருந்தபோதிலும், இச்சிறுவனின் இடது முழங்கால் மூட்டுக்கு  அருகிலுள்ள எலும்பில் இருந்த எலும்பு புற்றுநோயை வெற்றிகரமாக குணப்படுத்த  எங்களால் முடிந்தது.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின்  முதன்மை செயலாக்க அதிகாரி ஹரிஷ் திரிவேதி பேசுகையில், “சிறப்பான விளைவுகளை  உறுதிசெய்ய மிகச்சிறந்த சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்க அப்போலோ  புரோட்டான் கேன்சர் சென்டரில் நாங்கள் முழுமையாக உறுதி ஏற்றிருக்கிறோம். நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு 360 டிகிரி  முழுமையான சிறப்பு சிகிச்சை பராமரிப்பை இந்த மருத்துவமனை வழங்குகிறது.   அனுபவம் மிக்க மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொறியியலாளர்கள்,  செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க  குழுவுடன், புற்றுநோய்க்கான முழுமையான சிகிச்சையை வழங்குகின்ற நவீன  சிகிச்சைப் பிரிவுகளை இந்த மையம் கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினர்.


Tags : Apollo Proton Cancer Center , 3D Printing Technology, Bone Cancer, Apollo Proton Cancer Center
× RELATED மலக்குடல் புற்றுநோய்க்கு இந்தியாவின்...