×

உக்ரைன் - ரஷ்யா போர்: கடந்த 6 நாளில் 6000 ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு

கீவ்: உக்ரைனில் கடந்த 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கிய ரஷ்யா, 7 ஆம் நாளாக இன்றும் அதிரடி காட்டி வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலால் கடந்த 6 நாளில் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் இன்று 7 வது நாளாக, உக்ரைனின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைனின் பொருளாதார மண்டலமாக உள்ள கெர்சன் நகரை முழுமையை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

3 லட்சம் மக்கள் தொகை கொண்ட கெர்சன் பகுதியில் 20% பேர் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள். கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த முக்கிய நகரமாக கெர்சன் பார்க்கப்படுகிறது. உக்ரைனில் நோவா, ககோவ்கா உள்பட இரு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கெர்சன் நகரை முழுமையை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளதை அடுத்து உக்ரைன் ஆளுநரும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலில் கடந்த 6 நாளில் 6,000 ரஷ்ய படைகளைச் சேர்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Tags : Ukraine ,Russia ,President of Ukraine Zhelensky , Ukraine - Russia, war, 6 days, 6000 Russian soldiers, killed, Zhelensky
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி