×

கேரளா ட்ராவல்ஸ் நிறுவனம் பெயரில் பல லட்சம் ரூபாய் சுருட்டல்: பிரபல பாடகர் தேவன் உள்பட 10 பேர் போலீசில் புகார்

சென்னை: சொகுசு சுற்றுலா ஏற்பாடு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தனியார் ட்ராவல்ஸ் ஏஜென்சி மீது பிரபல பாடகர் தேவன் ஏகாம்பரம்  உட்பட 10க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளனர். காதலர் தினம் திரைப்படத்தில் ஓ மரியா என்ற பாடலை பாடி   பிரபலம் ஆனவர் திரு.தேவன் ஏகாம்பரம். பார்த்திபன் கனவு திரைபடத்தில் நடிகராக நடித்திருக்கிறார். இவர் விஷ்ணு விஷால் நடித்த பலே பாண்டியா திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆவர். பாடகர் தேவன் ஏகாம்பரம் உட்பட 10 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கர்மா ரிசார்ட்ஸ்  என்ற தனியார் ட்ராவல்ஸ் ஏஜென்சியில் 3 வருட உறுப்பினராக  45,000 பணம் செலுத்தி இணைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு சுற்றுலா தளங்களில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதிகளோடு பயணவசதி ஏற்பாடு செய்து தருவதாக கர்மா ஏஜென்சி தெரிவித்ததை நம்பி உறுப்பினராக சேர்த்ததாக  அவர்கள் கூறியுள்ளனர். அனால், நிறுவனத்தில் எந்தவித சேவையும் வழங்கவில்லை என்றும் பணத்தை திருப்பி கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் பாதிக்கபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதனையடுத்து கர்மா ஏஜென்சி தரப்பில், தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று  மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த கர்மா ரிசார்ட்ஸ் கூறியுள்ளது. பிரபல நிறுவனத்தை நம்பி பலரும் மோசடியில் ஏமாந்திருப்பதி தெரியவந்துள்ளது.

தற்போது வாள்ராக் என்ற  பெயரில் இந்த நிறுவனம் பெயர் மாற்றம் செய்து செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். குறைந்தபட்சம் 45,000 முதல் 5 லட்சம் வரை பேக்கேஜ் அடிப்படையில் உறுப்பினர்களை சேர்த்து மோசடி செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்தில் மீது குஜராத், சூரத் நகரில் ஜனவரி மாதம் வழக்கு பதியப்பட்டு மேலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Tags : Travels ,Devan , Lakhs of rupees laundered in the name of Kerala Travels: 10 people, including popular singer Devan, have lodged a complaint with the police
× RELATED அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த...