×

சமூகநீதிக்கான சரித்திர நாயகரான நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள்!: திருமா, அன்புமணி ராமதாஸ், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். முதலமைச்சருக்கு நல்லகண்ணு, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில்,

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வாழ்த்து:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பொதுவாழ்க்கை சிறக்கவும், நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்றும் அன்புமணி குறிப்பிட்டிருக்கிறார்.

விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகநீதியை பாதுகாத்திட முதல்வர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு விசிக உற்றத்துணையாக களத்தில் நிற்கும்.

தி.க. தலைவர் கி.வீரமணி வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதிக்கான சரித்திர நாயகரான நமது முதலைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த 69 என்பது ஒரு தனித்தன்மையானது; இந்தியாவிலேயே வேறு எங்குமில்லாத சமூகநீதி என்னும் இடஒதுக்கீடு 69 விழுக்காடு. 69 சதவீத இடஒதுக்கீடு ஒடுக்கப்பட்டோருக்கு எப்படி தனிச் சிறப்போ அதுபோல 69 வயதில் முதலமைச்சர் அடியெடுத்து வைக்கிறார். 69 வயதில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர், சமூகநீதி, மாநில உரிமையை முன்னிறுத்தி நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

அன்புமணி ராமதாஸ் வாழ்த்து:

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69-ஆவது பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொதுவாழ்க்கை சிறக்க வேண்டும்; அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என்று  வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீமான் வாழ்த்து:

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளுக்கு நடிகர் விஜய்சேதுபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


Tags : Md. ,KKA Stalin ,Anbumani Ramadas ,BC ,Weramani , Social Justice, Chief MK Stalin, Birthday
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த...