×

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பு நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி, கடப்பாக்கத்தில் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான 18.93 ஏக்கர் நிலத்தை, கடந்த பல ஆண்டுகளாக, தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலங்களை மீட்டு தரக்கோரி அப்பகுதி மக்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில், அறநிலையத்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று, நில அளவை ரேடார் கருவி குழுவினர் மூலம் நில எல்லைகள் அளவீடு செய்தனர். பின்னர், அங்கு எல்லை கற்களை நட்டு வைத்து, ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை அதிரடியாக மீட்டனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்களின் மொத்த மதிப்பு ₹25 கோடி என கூறப்படுகிறது.

Tags : Kasi ,Viswanadar Temple , Recovery of land worth Rs 25 crore belonging to Kasi Vishwanathar temple: Charitable Department action
× RELATED பூந்தமல்லி அருகே காசி விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்