×

வேப்பூர் அருகே பக்தர் தலையில் தீயிட்டு பொங்கல் வைக்கும் வினோதம்

வேப்பூர்: வேப்பூர் அருகே பக்தர் தலையில் தீயிட்டு பொங்கல் வைத்து வினோத கிராமம் வழிபடுகிறது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவிலில் மாசி மாதம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது 5ம் நாள் திருவிழாவில் சாமி வீதியுலா வரும். அப்போது பக்தர் ஒருவர் தலையில் சக்கர வடிவில் சுற்றப்பட்ட துணியை மண்ணெண்ணெய்யில் நினைத்து அந்த துணியை பக்தர் தலையில் வைத்து தீ வைத்து எரியவிடுகின்றனர். பக்தர் தலையில் எரியும் அந்த நெருப்பின் மீது  ஒரு பாத்திரத்தை  வைத்து அதில் அரிசி, வெள்ளம் போட்ட பொங்கல் வைக்கும் வினோதம் நடைபெறுகிறது. அந்த பொங்கலை வீதியுலா வரும்  சாமிக்கு  படைத்து உடல் நிலைப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரசாதமாக தருகின்றனர். பிரசாதத்தை வாங்கி சாப்பிடுபவர்களின்  உடல் நலம் குணமடைவதாக நம்பப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Veppur , It is strange to set fire to the head of a devotee near Veppur and hold a Pongal
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான்...