×

12ம் வகுப்பு தேர்வு ரத்து அறிவிப்புக்கு ‘தேங்க்யூ மோடி சார்’ இப்போது அவசியமா?.. கேந்திரிய பள்ளிகள் அதிர்ச்சி

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரத்து அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  ‘தேங்க்யூ மோடி சார்’ என்ற ஹேஷ்டாக்கில் வீடியோ பதிவிட கூறிய உத்தரவுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 1ம்  தேதி பிரதமர் மோடி ஆற்றிய உரையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக சிபிஎஸ்இ  12ம் வகுப்பு தேர்வை ரத்துசெய்வதாக அறிவித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு மண்டலத்தில் இருக்கும் 51 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர்களுக்கும், மண்டல துணை ஆணையர் மாலா சம்பானா, வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘பெங்களூர் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பள்ளி முதல்வர்களும், ‘தேங்க்யூ மோடி சார்’ எனும் ஹேஷ்டேகில் குறைந்தது 5 வீடியோக்களையாவது மாணவர்கள் நன்று கூறுப்படி உருவாக்கி, அதனை ரீடுவிட் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல, கேரள மாநிலம் எர்ணாகுளம் மண்டலத்தில் உள்ள 39 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும், வாட்ஸ்அப் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘மத்திய அரசின் நிதியால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு நாடு முழுவதும் 25 மண்டலங்களும் அவற்றின் கீழ் 1,200 பள்ளிகளும் வெளிநாடுகளில் 3 பள்ளிகளும் செயல்படுகின்றன. ஒவ்வொருவரும் பிரதமருக்கு நன்றி கூறி டுவிட் அனுப்பவேண்டும் என்று சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைக் குறைத்து மதிப்பிடச்செய்வதாகும். இது துரதிர்ஷ்டவசமானது. இதிலிருந்து மாணவர்கள் எதைக் கற்றுக்கொள்வார்கள்? இதனால் மாணவர்கள் தங்கள் கல்வி நிலையத்தின் மீது என்ன மரியாதையை வைத்திருக்கமுடியும்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர். …

The post 12ம் வகுப்பு தேர்வு ரத்து அறிவிப்புக்கு ‘தேங்க்யூ மோடி சார்’ இப்போது அவசியமா?.. கேந்திரிய பள்ளிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Tengue Modi Sahar ,CBSE ,Tengue Modi ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...