×

காஞ்சிபுரம் அருகே பயங்கரம் திமுக மாவட்ட பிரதிநிதி கொலை

சென்னை:  காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் சேகர் (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சைலஜா (45), கோனேரிக்குப்பம் ஊராட்சி தலைவர். இவர்களுக்கு 3 குழந்தைகள். கடந்த சில மாதங்களுக்கு முன், புரட்சி பாரதத்தில் இருந்து திமுகவில் இணைந்த போது அவருக்கு மாவட்ட பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சேகர், விப்பேடு கிராமத்தில் நடந்த உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்றார். பின்னர் அவர் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே தலையாறி தெருவில் வந்தபோது, திடீரென வந்த 2 பேர், கத்தியால் அவரை வெட்டிக் கொன்றனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேகரின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில் டிஐஜி சத்யபிரியா, எஸ்பி சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். திமுக பிரமுகர் கொலை சம்பவம் குறித்து எஸ்பி சுதாகர், செய்தியாளர்களிடம் கூறுகையில், கோனேரிகுப்பம் ஊராட்சி தேர்தலில், அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர், போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு, துணை தலைவர் பதவியை சேகரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, ஊராட்சி மன்ற கட்டிடமும், அங்குள்ள தொலைக்காட்சி அறையும் இடிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் தம்பி இளவரசன், பைக்கில் சென்ற சேகரை மறித்தது, தகராறு செய்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த அவரது கூட்டாளிகள் 3 பேர், திடீரென சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரிக்கின்றனர்.  இதற்கிடையில், இளவரசனை போலீசார் தேடுவதை அறிந்ததும், அவர் சரணடைந்துவிட்டார். என்றார்.

Tags : Kanhipuram , Kanchipuram, DMK, murder
× RELATED காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்...