×

அட்டப்பாடி,தாவளம், முள்ளி, மஞ்சூர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்திற்கு தமிழக வனத்துறை தடை

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி தாவளம், முள்ளி, மஞ்சூர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்திற்கு தமிழக வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் கேரளாவிலிருந்து அட்டப்பாடி தாவளம், முள்ளி, மஞ்சூர் வழியாக ஊட்டி செல்ல தமிழக வனத்துறை தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர்,காசர்கோடு,கோழிக்கோடு,மலப்புரம் மற்றும் பாலக்காடு  ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மன்னார்க்காடு தாலுகாஅட்டப்பாடி தாவளம்  முள்ளி வழியாக தமிழகம் மஞ்சூர் வழியாக குன்னூர் சென்று ஊட்டி சென்று வருகின்றனர். தற்போது திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஊட்டி செல்கின்ற கேரள மாநில அரசு பதிவெண் கொண்ட வாகனங்கள் சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

கேரள வாகனங்கள் முள்ளி சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.  இதுகுறித்து கோவை மாவட்ட வனஅலுவலர் (டி.எப்.ஓ.,) அசோக்குமார் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இவ்வழித்தடத்தில். காட்டு யானைகள் உட்பட வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த  பகுதியாகும். வனவிலங்குகள் தற்போது கோடைசீசன் துவங்கியுள்ளதால் தண்ணீர் தேடி பவானி நதி, சிறுவாணி நதி ஆகிய இடங்களுக்கு தண்ணீர் தேடி இடம் பெயர்ந்துவாறு உள்ளது.

இதனால் இரவு  பகல் இவ்வழித்தடத்தில் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது  சுற்றுலாப்பயணிகளால் அதிகளவு வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், ஏற்படாமல் தடுக்க தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு இவ்வழியாக சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மக்கள் வந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Forest Department ,Attappadi ,Tawalam ,Mulli ,Manjur , Palakkad: Kerala State Palakkad District Attappadi Tabalam, Mulli, Manjur Hill Traffic Tamil Nadu
× RELATED புதிய யானை வழித்தட பிரச்னைக்கு தீர்வு...