×

உக்ரைனில் ரஷியா குண்டு மழை.. ஐ.நா. அறிவுரைகளை மீறி அதிபர் புதின் போர் தொடுக்க உத்தரவு; அதிபர் ஜோபிடன் கடும் கண்டனம்!!

மாஸ்கோ : உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின.ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷியா உத்தரவிட்டது.

*உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை தாக்க தொடங்கியது ரஷியா.ஒடேசா, கார்க்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி வருகிறது.

அதிபர் ஜோபிடன் கண்டனம்!!

*உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ரஷியாவின் நடவடிக்கையால் ஏற்படும் உயிரிழப்புகளை ரஷியா தான் பொறுப்பு என்றும் ஜோபிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

 ஐ.நா. வேண்டுகோள்!!

*உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உக்ரைன் மீது போர் தொகுப்பதை ரஷியா நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.அறிவுறுத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷியா முன்வர வேண்டும், என்று தெரிவித்தார்.

உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் புதின்!!

*இருப்பினும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷிய அதிபர் உத்தரவிட்டார். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை அடுத்து அங்கு ரஷிய படைகளை அனுப்ப தாம் உத்தரவிட்டுள்ளதாக புதின் விளக்கம் அளித்துள்ளார். டான்பாஸ் பகுதியில் ரஷிய ராணுவம் தாக்குதலை தொடங்கும் என்று தெரிவித்துள்ள புதின்,கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனில் இருந்து உக்ரைன் ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிராக செயல்பாட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் புதின் கூறியுள்ளார். மேலும்
உக்ரைன் ராணுவத்தினர் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்றும் புதின் எச்சரித்துள்ளார். ரஷியாவின் போர் நடவடிக்கை காரணமாக தனது வான்வழியை மூடியது உக்ரைன். வர்த்தக மற்றும் பயணிகள் விமான சேவையையும் தற்காலிகமாக நிறுத்தியது. ஏற்கனவே ரஷியாவும் தனது வான்வழியை மூடி இருந்தது.
 
*ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் நிதியமைச்சர், விடிபி வங்கியின் தலைமை செயல் அதிகாரி மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது ; உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக அங்கீகரித்ததால் ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விதித்துள்ளது.



Tags : Russia ,Ukraine ,GI UN ,jobidan , Jopitan, condemnation, Ukraine, Putin, Russia
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு