×

புதுக்கோட்டையில் 2 நகராட்சி, 7 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

புதுக்கோட்டை : நகர்புற உள்ளிட்டசி தேர்திலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது.
முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனையடுத்து மின்னணு வாக்கு இயந்திரம் வைக்கப்ட்ட அறையை சீல் அகற்றிவிட்டு வாக்கு பெட்டிகளை எடுத்துவந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கினர். பின்னர் ஒவ்வொரு வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தொடர்ந்து அறிவித்த வண்ணம் இருந்தனர். கலை முதல் நடந்த வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே திமுகவினர் தொடர்ந்து பெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வெளியேறி வந்தனர்.

மேலும் புதுக்கோட்டை நகராட்சியை மொத்தமுள்ள 42 வார்டுகளில் 23 வார்டுகளில் வென்று திமுக தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக ஓரிடத்தையும், திமுக கூட்டணியில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளன. அதிமுக 8 இடங்களையும், சுயேச்சை 6 இடங்களையும், அமமுக ஓரிடத்தையும் பெற்றுள்ளன.
வார்டு வாரியாக வென்றவர்கள் விவரம்:

1வது வார்டு பழனிவேலு (சுயே.), 2ல் மதியழகன் (திமுக), 3ல் கார்த்திகைசெல்வி (திமுக), 4வது வார்டில் முகமது பர்வேஸ் (விஜய் மக்கள் இயக்கம்), 5ல் அடைக்கலம் (சுயே.), 6வது வார்டில் சத்யா (அதிமுக), 7ல் ராஜாத்தி (திமுக), 8ல் அனுராதா (திமுக), 9ல் செந்தாமரை (திமுக), 10வது வார்டில் பால்ராஜ் (திமுக), 11ல் அன்புமேரி (அமமுக), 12வது வார்டில் செந்தில்மதி (அதிமுக), 13ல் அமுதா (காங்கிரஸ்), 14ல் காந்திமதி (திமுக), 15ல் காசிலிங்கம் (மதிமுக), 16ல் அப்துல்ரகுமான் (அதிமுக), 17ல் லியாகத்அலி (திமுக).

18வது வார்டில் பாரதி (அதிமுக), 19ல் ராஜேஸ்வரி (காங்கிரஸ்), 20ல் ரமேஷ்பாபு (திமுக), 21வது வார்டில் மெகர்பானு (திமுக), 22ல் ராஜேந்திரன் (திமுக), 23ல் குமரகுருபரன் (சுயே.), 24ல் அனு ஹரினா (சுயே.), 25ல் திலகவதி (திமுக), 26ல் லதா (திமுக), 27ல் மூர்த்தி (சுயே.), 28ல்எட்வர்டு சந்தோசநாதன் (திமுக), 29ல் சரவணன் (திமுக), 30ல் லதா (திமுக).

31ல் சுமதி (அதிமுக), 32ல் ஜெயா (அதிமுக), 33ல் ராஜேஸ்வரி (திமுக), 34ல் ராஜா முகமது (காங்கிரஸ்), 35ல் ஜாகிர்உசேன் (திமுக), 36ல் வளர்மதி (திமுக), 37ல் தெய்வாணை (திமுக), 38ல் காதர்கனி (திமுக), 39ல் ராஜேஸ்வரி (திமுக), 40ல் சு. செந்தில்குமார் (அதிமுக), 41ல் சு. பாண்டியன் (அதிமுக), 42ல் சு. கவிவேந்தன் (திமுக).

திமுக கூட்டணி அமோகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 189 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக 111 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் தலா 1 இடங்கள் என திமுக கூட்டணி 127 இடங்களில் வெற்றி பெற்றன. இதேபோல, அதிமுக 30 இடங்களிலும், தேமுதிக 3இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும், சுயேச்சைகள்27 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் அரிமளம், ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி, பொன்னமராவதி, இலுப்பூர், கீரனூர் ஆகிய 7 பேரூராட்சிகளில் திமுக கூட்டணியும், அன்னவாசல் பேரூராட்சியை அதிமுகவும் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

அனைத்திலும் பாஜக தோல்வி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சி, 8 பேரூராட்சிகளில் பல இடங்களில் பாஜக தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியது. தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர். ஆனால் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது போட்டியட்ட அணைத்து வார்டுகளிலும் தோல்வியை தலுவியது. குறிப்பாக ஒரு வேட்பாளரை தவிர அனுத்து வேட்பாளர்களும்இட டெப்பாசிட்டை இழந்தது. இதேபோல் மக்கள் நீதிமையம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் ஒரு இடங்களில் டெப்பாசிட் மெறாமல் தோல்வியடைந்தனர்.

Tags : Pudukotta , Pudukottai: The counting of votes in the urban local government elections started yesterday morning at the Pudukottai Government Arts College.
× RELATED சுற்றுலா தளமாக அறிவிப்பு:...