×

சுத்தமல்லி அருகே மரம் வெட்டும் கூலி தொழிலாளியை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அருகே நத்தவெளி கீழத்தெருவைச் சேர்ந்த காசிநாதன் மகன் சவுந்தரராஜன் (30). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளி.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வழக்கம் போல மரம் வெட்ட சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பின்னர் சவுந்தரராஜன் தந்தை காசிநாதன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சவுந்தரராஜன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சுத்தமல்லி பெரியஓடை அருகில் உள்ள வேப்பமரத்தில் சவுந்தரராஜன் தான் அணிந்திருந்த லுங்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டனர்.உடனே அருகில் உள்ளவர்கள் உடையார்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சவுந்தரராஜன் தந்தை தனது மகன் சாவில் மர்மம் உள்ளதாக அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிந்து எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை இறந்து போன சவுந்தரராஜன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சவுந்தரராஜனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்ப இடத்திற்கு வந்த உடையார்பாளையம் இன்ஸ்ெபக்டர் ரவி சக்கரவர்த்தி மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொலை செய்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சுந்தரேசபுரம்-தா.பழூர் சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Chuttamalli , Dhaka: Saundarajan (30), son of Kasinathan, hails from Nathaveli Lower Street near Chuttamalli in Ariyalur district. He is a lumberjack
× RELATED விடாமுயற்சியால் பேராசிரியராகிய சுத்தமல்லி காவல் நிலைய காவலர்