×

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி-22 பேரூராட்சிகளிலும் பெரும்பான்மை பிடித்தது

தேனி : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் கடந்த 19ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் நகராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 2 பேர் தவிர்த்து, மீதமுள்ள 175 பதவி இடங்களுக்கும் 22 பேரூராட்சிகளில் 5 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 331 வார்டுகளுக்கும் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

 தேர்தல் முடிந்ததை அடுத்து நேற்று மாவட்டத்திலுள்ள 11 வாக்கு எண்ணும் மையங்களில வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில்  6 நகராட்சிகளிலும் திமுக அமோக வெற்றியை  பெற்றுள்ளது.தேனி-அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளில்,  திமுக தனிப்பெரும்பான்மையாக  19,  காங்கிரஸ் 2,  அதிமுக 7, அமமுக 2, பாஜ 1, சுயேட்சை 2  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

பெரியகுளம் நகராட்சியில் உள்ள  30 வார்டில் திமுக 12,  அதிமுக 8, அமமுக 3,   பார்வர்டு பிளாக் 1, முஸ்லிம் லீக் 1, சிபிஎம் 1, பாமக 1,   அமமுக 3 வார்டுகளில் வெற்றி பெற்றது.
சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டில் திமுக 21, அதிமுக 5, பாஜ 1 வார்டுகளில் வெற்றி பெற்றது.போடிநயக்கனூர் நகராட்சியில் 33 வார்டுகளில்   திமுக 20, அதிமுக 9, காங்கிரஸ் 1, பாஜ 2, கம்யூனிஸ்ட் 1 வார்டில் வெற்றி பெற்றது.

கம்பம் நகராட்சியில் 33 வார்டில் திமுக 24, அதிமுக 7, காங்கிரஸ் 1, இந்து முஸ்லிம் லீக் 1 வார்டுகளில் வெற்றி பெற்றது.கூடலூர் நகராட்சியில் 21 வார்டில் திமுக 11,  அதிமுக 8 சுயேட்சை 2  வார்டுகளில் வெற்றி பெற்றது. ஆறு நகராட்சிகளில் மொத்தமுள்ள 177 வார்டுகளில் திமுக 107, அதிமுக 44, அமமுக 5, பாஜ 4, காங்கிரஸ் 4, சுயேட்சை 7, பாமக 1 ,  முஸ்லீம் லீக் 2, பார்வர்டு பிளாக் 1, சிபிஎம் 2 வார்டுகளில் வெற்றி பெற்றது.

பேரூராட்சிகளிலும் வெற்றி வாகை சூடிய திமுக கூட்டணி

ஆண்டிபட்டி 18 வார்டுகளில்  திமுக 11,  அதிமுக 5, சுயேட்சை 2 , இ.கம்யூ 1, மா.கம்யூ 1.
போடி மீனாட்சிபுரம்  15 வார்டுகளில் திமுக 4 அதிமுக 11.
பூதிப்புரம்  15 வார்டுகளில்  திமுக 9, அதிமுக 3, சுயேச்சை 3.
தேவதானப்பட்டி 18 வார்டுகளில் திமுக 12,  அதிமுக 3, சுயேட்சை 3.
கெங்குவார்பட்டி 15 வார்டுகளில்  திமுக 10,  அதிமுக 3 , சுயேட்சை 1, அமமுக 1.
அனுமந்தன்பட்டி 15 வார்டுகளில் திமுக 10,  சுயேச்சை 3, அதிமுக 2.
ஹைவேவிஸ் 15 வார்டுகளில்  திமுக 10, அதிமுக 4, சுயேட்சை 1.
காமயகவுண்டன்பட்டி 15 வார்டுகளில் திமுக 7,  அதிமுக 3, சுயேட்சை 2, அமமுக 1, பாஜ 1,
சிபிஐஎம் 1.

கோம்பை 15 வார்டுகளில் திமுக 12, சுயேட்சை 3.
குச்சனூர் 12 வார்டுகளில் திமுக 11, சுயேட்சை 1.
மார்க்கையன்கோட்டை 12 வார்டுகளில்  திமுக 7, அதிமுக 5.
மேலசொக்கநாதபுரம்  15 வார்டுகளில்  திமுக 10, அதிமுக 3, இ.கம்யூ 1, பாஜ 1.
ஓடைப்பட்டி 15 வார்டுகளில் திமுக 11, அமமுக 2, அதிமுக 2.
பழனிசெட்டிபட்டி 15 வார்டுகளில்  திமுக 7, அமமுக 6, அதிமுக 2.
பண்ணைபுரம் 15 வார்டுகளில் திமுக 9, அதிமுக 5, இ.கம்யூனிஸ்ட் 1.
கம்பம் புதுப்பட்டி 15 வார்டுகளில் திமுக 4, சுயேட்சை 6, அதிமுக 1.
தாமரைக்குளம் 15 வார்டுகளில் திமுக 8, அதிமுக 2, சுயேட்சை 4, விசிக 1.

தென்கரை 15 வார்டுகளில் திமுக 10, அதிமுக 3, சுயேட்சை 1 , விசிக 1.
தேவாரம் 18 வார்டுகளில்  திமுக 10, அதிமுக 3, அமமுக 2, சுயேட்சை 2, விசிக 1.
உத்தமபாளையம் 18 வார்டுகளில் திமுக 12, அதிமுக 2, சுயேட்சை 2, விசிக 1, காங்கிரஸ் .
வடுகபட்டி 15 வார்டுகளில் திமுக 4, அதிமுக 1,   விசிக 1, சுயேட்சைகள் 9.
வீரபாண்டி 15 வார்டுகளில் திமுக 10, அதிமுக 1, மதிமுக 1, சுயேட்சை 3 என
மொத்தமுள்ள 22 பேரூராட்சியில் 336 வார்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 196, அதிமுக 65,
அமமுக 10, சுயேட்சை 48, இந்திய கம்யூனிஸ்ட் 4, பிஜேபி 4,சிபிஐஎம்  2, விசிக 5, காங்கிரஸ் 1, மதிமுக 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

Tags : Theni district ,DMK alliance ,Amoga Vetri- , Theni: DMK has won all the six municipalities in Theni district in the urban local body elections. In Theni district
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!