×

களக்காடு, காயல்பட்டினம், சங்கரன்கோவிலில் சுயேட்சை ஆதரவு யாருக்கு?

சென்னை: களக்காடு, காயல்பட்டணம் நகராட்சிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் இடத்தில் சுயேட்சைகள் உள்ளனர். களக்காடு: நெல்லை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட களக்காடு நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 10 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும், சுயேச்சைகள் 11 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். களக்காடு பேரூராட்சியாக இருந்த போது தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை திமுகவை சேர்ந்தவர்களே அலங்கரித்துள்ளனர். அதுபோல புதிதாக உருவாக்கப்பட்ட களக்காடு நகராட்சியையும் சுயேச்சைகள் உதவியுடன் திமுகவே மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயல்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்  நகராட்சி 18 வார்டுகளில் திமுக 4 இடங்களிலும், மீதி 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் காயல்பட்டினம் நகராட்சியில் வழக்கம்போல சுயேச்சை வேட்பாளரே தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் திமுகவும், அதிமுகவும் தலா 12 வார்டுகளிலும், சுயேச்சைகள் 5 வார்டிலும், ஒரு வார்டில் எஸ்டிபிஐ கட்சியும் வென்றுள்ளது. இங்கு, சுயேச்சைகள் ஆதரவுடன் திமுக நகராட்சியை கைப்பற்றுகிறது.


Tags : Kalakkad ,Kayalpattinam ,Sankarankoil , Who has the independent support in Kalakkad, Kayalpattinam and Sankarankoil?
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...