×

வெட்டி கொல்லப்பட்ட திமுக வட்ட செயலாளர் செல்வம் மனைவி சமினா 188வது வார்டில் வெற்றி

சென்னை: சென்னையில் பிப்ரவரி மாதம் 3ம் தேதி 188வது வார்டு திமுக வட்டச் செயலாளர் செல்வம் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த வார்டில் அவரது மனைவி சமினா போட்டியி திமுக வாய்ப்பு வழங்கியது. தற்போது அவர் 188வது வார்டில் அவர் 2,975 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சென்னை மடிப்பாக்கம் 188-வது தி.மு.க வட்ட செயலாளர் பதவியில் இருந்தவர் செல்வம் (வயது 45). ராஜாஜி நகரில் உள்ள இவரது அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி இரவு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்.

செல்வம்  தி.மு.க சார்பில் 188-வது வட்ட  வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவற்கு திமுக சார்பில் மனு போட்டிருந்ததார். இந்நிலையில் அவர் வெட்டி கொல்லபட்டார். இந்நிலையில் இவரது மனைவி சமினாவுக்கு திமுக வாய்ப்பு வழங்கியது. அவர் இந்த தேர்தலில் 2975 வாக்குகள் அதிகம் பெற்று, அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

Tags : Samina ,Vimuka Round , DMK district secretary Selvam's wife Samina wins 188th ward
× RELATED வெட்டி கொல்லப்பட்ட திமுக வட்ட...