×

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை 27ம்தேதி துவங்குகிறது

குளச்சல் :  பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா வரும் 27ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மார்ச் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் திருக்கொடியேற்று, மதியம் 1 மணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது.

3ம் நாள் முதல் 9ம் நாள் வரை தினமும் காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடக்கிறது. 6ம்  நாள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை, 9ம் நாள் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியுடன் பெரிய சக்கர தீவெட்டி பவனி, 10ம் நாள் அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோயிலில் இருந்து யானை மீது களபம் பவனி,  3.30 மணிக்கு அம்மன் பவனி, காலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை அடியந்திரபூஜை, குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையை தொடர்ந்து திருக்கொடி இறக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 விழா நடக்கும் 10 நாட்களும் கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 85வது இந்து சமய மாநாடு நடக்கிறது. சமய மாநாட்டை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரத் தலைவர் சைதன்யானந்தா தொடங்கி  வைத்து உரையாற்றுகிறார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றுகிறார். 10ம் நாள் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சமய மாநாட்டில் மாநில பா.ஜ. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

கேரள பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

மாசிக்கொடை கொடியேற்றம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நேற்று மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு கேரள பெண் பக்தர்கள் அதிகமாக வருகை தந்தனர்.அவர்கள் பொங்கலிடும் பகுதியில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. கேரள பெண் பக்தர்கள் வருகை தந்து பொங்கலிட்டு வழிபட்டதால் மண்டைக்காடு கோயில் இப்போதே களைக்கட்ட தொடங்கி உள்ளது.

Tags : Bhagavadi Amman Temple ,Manikoda 27Mtethi , Kulachal: The famous Mandaikadu Bhagwati Amman Temple Mass Gift Ceremony will start on the 27th with the flag hoisting and will continue till the 8th of March.
× RELATED கரூர் குளித்தலை அருகே பகவதி அம்மன்...