×

திருவெற்றியூர் கோவிலில் ஆபத்தான தங்கும் விடுதியை அகற்ற வேண்டும்-பக்தர்கள் வேண்டுகோள்

திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அதனை அகற்றி விட்டு புதிய தங்கும் விடுதி கட்டி தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத மேகநாதசுவாமி கோ யில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து இங்கு தங்கி சாமி கும்பிட்டு செல்கின்றனர்.

பக்தர்கள் வருகைக்காக வெள்ளிக் கிழமை அன்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிற ப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பாக தங்கிட போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை என பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.திருவெற்றியூர் கிராமமக்கள் கூறுகையில், மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று.

 இக்கோயிலில் வரும் பக்தர்கள் தங்கி சாமி கும்பிடுவது சிறப்பாக கருதப்படுகிறது. இதனால் வெளியூர் பக்தர்கள் வந்து தங்கி காலையில் சாப்பிடுவது வழக்கமாக உள்ளனர். இதற்காக தேவஸ்தானம் சார்பில் 8 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு திறந்தவெளி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. 2 தங்கும் விடுதி உள்ளது.

இதில் திறந்தவெளி மண்டபம் தவிர தங்கும் அறைகள் பழுதடைந்து விட்டது. தங்கும் விடுதி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் வாடகைக்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த தங்கும் விடுதியை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய விடுதியை கட்டித்தர வேண்டும் என்றனர்.

Tags : Thiruvetriyoor temple , Thiruvananthapuram: The Thiruvetriyoor Pagambriyal temple hostel is in danger of collapsing. Remove it and leave it fresh
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு