×

ஏர் இந்தியாவின் புதிய சி.இ.ஓ.-வாக துருக்கியைச் சேர்ந்த இல்கர் அய்சி நியமனம்

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக துருக்கியைச் சேர்ந்த இல்கர் அய்சியின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பின்னணி குறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சகம் கவனமாக ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை அண்மையில் டாடா குழுமம் வாங்கியது.  இந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, துருக்கியைச் சேர்ந்த இல்கர் அய்சி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனின் ஆலோசகர், இஸ்தான்புல் மேயர், 2015 ஆம் ஆண்டு துருக்கி ஏர்லைன்ஸ் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். இல்கர் அய்சி துருக்கியைச் சேர்ந்தவர் என்பதால், ரா உளவு அமைப்பின் உதவியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படும் வெளிநாட்டு நபரின் பின்னணியை, ஒன்றிய உள்துறை அமைச்சகம் முழுமையாக விசாரிப்பது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  


Tags : Air India ,Ilgar Aysie ,Turkey , Appointed by Air India, CEO, Turkey, Ilker IC
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...