வாஷிங்டன்: 2 வருடமாக ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டிவிட்டயது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 59,05,835 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 42,47,93,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,02,82,600 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,494 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில் 282 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 9,59,412 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் 1.04 லட்சம் பேர், ரஷியாவில் 1.7 லட்சம் பேர், பிரேசிலில் 40,625 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.48 கோடியாக உயர்ந்தது. 59.05 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 35.03 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர்.