தஞ்சை: தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். தேவையின்றி சுற்றும் மக்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர். காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாகனங்களிலும், நடைபாதையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.