×

கோவை கலெக்டர் ஆபீசில் தர்ணா 9 அதிமுக எம்எல்ஏக்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட நபர்கள் குவிந்து பணம், பரிசு பொருட்கள் சப்ளை செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வந்தனர். வெளியூரை சேர்ந்தவர்களை வெளியேற்றவேண்டும் என வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான  எஸ்.பி. வேலுமணி உட்பட 9 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்  கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து கோஷமிட்டு கடும் எதிர்ப்பு காட்டினர். போராட்டத்தை கைவிட மறுத்து அவர்கள் ஆவேசமாக பேசினர். இவர்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் துணை கமிஷனர் ெஜயச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் போராட்டத்தை நிறுத்தவில்லை. வேலுமணி உட்பட அதிமுகவினர் அதே இடத்தில் படுத்தபடி எதிர்ப்பு காட்டினர்.

இதைத்தொடர்ந்து வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ஜூனன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராமன், அமுல் கந்தசாமி, தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் 17 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது   செய்து பின்னர் விடுவித்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





Tags : Tarna ,AIADMK ,Collector , Dharna at the Coimbatore Collector's Office On 9 AIADMK MLAs Case in 3 sections
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...