×

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, புதுக்கோட்டை உள்பட தென் மாவட்டகங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 22ம் தேதி வரை தென் மாவட்டங்கள், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Caviri Delta , Cauvery Delta District, Rain, Weather Center
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,070 கனஅடியாக குறைந்தது..!!