×

உக்ரைன் போர் பதற்றம்: RELAX என்ற வடிவில் வானில் பறந்த ஏர் மால்டோவா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம்

கிஷினேவ்: போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைன் அருகே, RELAX என்ற வடிவில், விமானி ஒருவர் விமானத்தை இயக்கியுள்ளார். மால்டோவா அருகே இயக்கப்பட்ட விமானத்தை டிராக் செய்தபோது, அது RELAX என்ற வடிவில் இயக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதனை தணிக்கவே RELAX என்ற வடிவில் பறந்ததாகக்கூறி, பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். ஆனால், RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக அவ்வாறு பறந்ததாக விமானி விளக்கமளித்துள்ளார். உக்ரைன் நாட்டிற்கு அருகே உள்ள மால்டோவா நாட்டின் தேசிய விமான நிறுவனம் ஏர் மால்டோவாவின், பயணிகள் விமானம் ஒன்று மால்டோவா நாட்டின் தலைநகரான கிஷினேவில் இருந்து ரிலாக்ஸ் (Relax) என்ற ஆங்கில வார்த்தையின் வடிவப் பாதையில் சென்றது.

பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் உண்மையில் அந்த விமானம் ஒரு வானொலி நிலையத்திற்கான விளம்பரத்திற்காக அவ்வாறு செய்துள்ளது. ரேடியோ ரிலாக்ஸ் மால்டோவா என்ற அந்த வானொலி நிறுவனத்தின் தொடக்கத்தை வித்தியாசமாக மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தலைநகர் கிஷினேவில் இருந்து மாலை 4.12 மணிக்கு கிளம்பிய அந்த விமானம் ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் வானில் ரிலாக்ஸ் என்ற வடிவில் பயணம் செய்து 5.50 மணிக்கு மீண்டும் கிஷினேவில் தரையறங்கியது.

Tags : Ukraine ,Air Moldova , Ukraine, RELAX, shaped, flying, aircraft
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு