திருச்சுழி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது

திருச்சுழி : திருச்சுழி அருகே மாங்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எம்.ரெட்டியபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் எஸ்ஐ ராமநாதன் தலைமையிலான போலீசார் மாங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாங்குளம் மாரியம்மன் கோயில் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பெண்களை விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மாங்குளத்தில் சேர்ந்த மீனாட்சி(34), தடாகை நாச்சியார்(32), சமுத்திரவள்ளி(32) ஆகிய மூன்று பெண்களை கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த 3 பெண்கள் மீதும் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: