×

சென்னை மாநகராட்சி மன்றத்தில் மக்களின் குரலாக ஒலிப்பேன்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் உறுதி

சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டு திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் நேற்று காலை முதல் மாலை வரை வார்டு முழுவதும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘சென்னை மாநகராட்சி மன்றத்தில் 141வது வார்டு மக்களின் குரலாக ஒலிக்க உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். மக்களோடு மாமன்ற உறுப்பினர் திட்டம், 24 மணிநேர மக்கள் குறைதீர் மையம், பெண்களுக்கு இலவச வேலை வாய்ப்பு மையம், இலவச கணினி பயிற்சி மையம், இலவச தியான யோகா பயிற்சி மையம், உடற்பயிற்சி மையம், புதிய குடிநீர் தொட்டி, மழைநீர் வடிகால், சிறுவர் விளையாட்டு திடல், சாலையோர நடைபயிற்சி பூங்கா, மாணவர்களுக்கு இலவச இ-சேவை மையம், அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச கைக்கணினி, ஆரம்ப சுகாதார மையத்தை தாய் சேய் நல மருத்துவமனையாக தரம் உயர்த்துவது, புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், கண்ணம்மாபேட்டை சுடுகாடு சீரமைப்பு, உயிர் நீத்தார் ஈமை சடங்கு மண்டபம், தினமும் குப்பை அகற்றுவது, கொசு மருந்து, கிருமி நாசினி தெளிப்பது, இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட 33 அம்ச மக்கள் நல திட்டம் செயல்படுத்தப்படும். கோ.உதயசூரியன், ஆ.ஏழுமலை, வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், ரெ.தங்கம், எல்.வீரப்பன், எஸ்.ராமலிங்கம், எல்.குமரன், ரா.கர்ணா, வழக்கறிஞர் ஜெயவேல், லயன் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Chennai Municipal Council ,DMK ,Raja Anpalagan , I will be the voice of the people in the Chennai Corporation: DMK candidate Raja Anpalagan confirmed
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு