பெரியபாளையம் அருகே மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரமம் நடத்தி வந்த பூசாரி கைது

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரமம் நடத்தி வந்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே  பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி (50) என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது ஆசிரமத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத இளம் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும் என தகவல்கள் பரவியது. இதனால், இந்த பூசாரியிடம் சென்று சாமியை வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம் மற்றும் திருமணம் ஆகும் என்று நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டது.  இதனால், கும்மிடிபூண்டி அருகே மெதிபாளையத்தை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி மகேஸ்வரி (24), இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால், மகேஸ்வரி ஊத்துக்கோட்டை அருகே  வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் உள்ள சாமியார் பற்றி தெரியவந்தது. அங்கு சென்ற மகேஸ்வரி அவரது தாயாருடன் தங்கி அங்கு 14 நாட்கள் குழந்தை பேறுக்கான சிகிச்சை பெற்று வந்தார்.  

இந்நிலையில், செம்பேடு கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரியின் சித்தப்பா ராமகிருஷ்ணனின் மகள் ஹேமமாலினி (20). இவர் திருவள்ளூர் அடுத்த தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒன்றறை ஆண்டுக்கு முன்பு இந்த ஆசீரமத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு, கடந்த 13ம் தேதிதான் மீண்டும் தனது பெரியம்மா இந்திராணி, அக்கா மகேஸ்வரி ஆகியோருடன் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு திடீரென வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதையறிந்த சாமியார் முனுசாமி அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்துள்ளார். ஆனால், முடியவில்லை.

பின்னர், அங்கிருந்து ஒரு ஆட்டோவில் வெங்கல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கும் கல்லூரி மாணவியை காப்பாற்ற முடியாததால், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 16ம் தேதி மாணவி இறந்து விட்டார்.  இது குறித்து மாணவி ஹேமமாலினியின் பெற்றோர்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாக பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பூசாரி முனுசாமியை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: