திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் உடைப்பு: 2 ஏக்கர் விளைநிலத்தில் பயிர்கள் சேதம்

திருவாரூர்: திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பயிர்கள் சேதமடைந்தது. திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் 9  ஓ.என்.ஜி.சி கிணறுகள் உள்ளது. அதில் 7 கிணறுகள் செயல்பாடு நிலையில் உள்ளது; மற்ற 2 கிணறுகள் செயல்படாமல் உள்ளது. எருக்காட்டூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான, விவசாய நிலத்திற்கு கீழே ஓ.என்.ஜி.சி எண்ணெய்க்குழாய் செல்கிறது. இந்நிலையில் இன்று காலை நடராஜன் வயலில் சென்று பார்த்தபோது குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வந்துள்ளது.

அவர் தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடிக்குப் பின், பாசிப்பயிறு சாகுபடி பணிகளை செய்து வந்தார். இந்நிலையில்,  ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பழுத்தால் வயல் நிலம் முழுவதும் எண்ணெய் பரவியுள்ளது. எண்ணெய் வெளியேறியதால், இனி விவசாயம் செய்யமுடியாது என விவசாயி கவலை தெரிவித்துள்ளார். தகவலறிந்த  ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் அவ்விடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, இங்கு முன்பே இருந்த குழாய் ஒன்று செயல்படாத நிலையில் இருந்தது; ஆனால் தற்போது கசிந்துள்ள எண்ணெய் எங்கு இருந்து வந்தது என்பதை soil பரிசோதனையின் மூலமே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பல ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள் செயல்பட்டு வருகிறது. தற்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின், செயல்பட்டுக் கொண்டிருந்த எண்ணெய் கிணறுகளை தவிர வேறு எந்த புதிய கிணறுகளும் அமைக்கப்படவில்லை. இருப்பினும், செயல்படாத நிலையில் உள்ள  ஓ.என்.ஜி.சி குழாயை மூடும் பணியில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்த திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் தாலுகாவில் 9 ஓ.என்.ஜி.சி குழாய்கள் இருந்தது. அதில் 2 செயல்படாத நிலையில் உள்ளது. இந்நிலையில் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளிடம், குழாய் உடைப்பை சரிசெய்து இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: