சென்னை: மலையாள முன்னணி நடிகை காவேரி, தமிழில் காசி, கண்ணாடி பூக்கள், சமுத்திரம், கண்ணுக்குள் நிலவு, அப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் இன்னும் தலைப்பு சூட்டப்படாத படம் ஒன்றை தமிழ், தெலுங்கு மொழியில் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் சேத்தன், சித்தி இத்னானி உள்பட பலர் நடிக்கின்றனர்.இந்தப் படத்துக்காக காவேரி, சேத்தன் நடித்த நிர்வாண காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார். இக்காட்சியை படத்தின் போஸ்டராகவும் வெளியிட்டு இருக்கிறார். கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் நிர்வாண காட்சியில் நடித்திருந்தாலும் கூட, ஒரு பெண் இயக்குனர் நிர்வாண காட்சியை தமிழில் படமாக்கி இருப்பது இதுவே முதல்முறை என்று சொல்கிறார்கள்.
