×

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: அடுத்தகட்ட விசாரணைக்கு யாருக்கெல்லாம் சம்மன் அனுப்பலாம் என்பது குறித்து நாளை ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட விசாரணைக்கு யாருக்கெல்லாம் சம்மன் அனுப்பலாம் என்பது தொடர்பாக நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்ததது. இந்த நிலையில் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போது மருத்துவ நிபுணர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், ஆணையம் அதை ஏற்காததன் காரணமாக உயர்நீதிமன்றம், அதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு 2 வருடங்களாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த சூழலில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் நிபுணத்துவம் பெற்ற எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்துவதற்கு  உச்சநீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது.

இதை தொடர்ந்து, இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறை ரீதியிலான வல்லுநர்கள் ஆவர்கள். மருத்துவக்குழுவை அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பு, அப்பல்லோ மருத்துவமனை தரப்பினர்களிடம் நாளை நீதிபதி ஆறுமுகசாமி  ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.  இந்த ஆலோசனையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்க வாய்பபுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் விசாரணைக்கு சம்மன் அனுப்ப வேண்டுபவர்களிர்களின் பட்டியலை சகிகலா மற்றும் அப்போலா தரப்பினர் ஆணையத்திடம் தருவார்கள். இதை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகவுள்ளவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Jayalalitha ,Aramuguzami Commission , Jayalalithaa's death, trial, Arumugasami, consultation
× RELATED சொல்லிட்டாங்க…