×

வலிமையான இடங்களில் தமாகா போட்டி: இளைஞரணி தலைவர் தமாஷ்

சிவகாசி. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமாகா தொடர்ந்து அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. நாங்கள் கேட்ட இடங்களை கொடுக்காததால் வலிமையாக உள்ள இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டில் ஒரு இடத்தில் கூட போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டதால், நாங்கள் போட்டியிடவில்லை.  திருநெல்வேலி, நாகர்கோவில் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். நீட் தேர்வால் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். மாநில துணைத்தலைவர் கார்த்தி உடனிருந்தார்.



Tags : Tamaga ,Tamash , In strong places Tamaga Competition: Youth Chairman Tamash
× RELATED மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என...