×

வேதாரண்யம் அருகே பூர்வீக வீட்டை இடித்ததால் விஷமருந்திய மூதாட்டி சீரியஸ்-மகன், மருமகள் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே பூர்வீக வீட்டை இடித்ததால் வேதனையில் விஷமருந்திய மூதாட்டி மருத்துவமனையில் சீரியசாக உள்ளார். இதுதொடர்பாக மகன்,மருமகள் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு பஞ்சகல்யாணி, பவானி என்ற இரு மனைவிகள். இதில் வடிவேலும் பஞ்சகல்யாணியும் இறந்து விட்டனர். தற்போது தென்னடாரில் உள்ள பூர்வீக வீட்டில் இரண்டாவது மனைவி பவானி தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் முதல் மனைவியின் மகன் எழிலழரசன், தென்னடாரில் உள்ள தனது பூர்வீக இடத்தில் புதிய வீடு கட்டுவதற்காக வீட்டை இடிக்க வேண்டும் என்று தனது சித்தி பாவனியிடம் கூறியுள்ளார். இதற்கு பவானி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த எழிலரசன் பலமுறை பவானிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பவானி விஷமருந்தி ஆபத்தான நிலையில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் பவானி சிகிச்சையில் இருக்கும்பொழுது எழிலரசன் ஜேசிபி எந்திரம் கொண்டு ஓட்டுவீட்டை இடித்து விட்டார். தகவலறிந்து தென்னடார் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில் இடித்த வீட்டருகே அமர்ந்து, காவல் துறை நடவடிக்கை கோரி இரண்டு மணி நேரம் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த வாய்மேடு பொறுப்பு இன்ஸ்பெக்டர் நாகலெட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தை தலைவர் விலக்கி கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டை இடித்த எழிலரசன், அவரது மனைவி கவிதா மற்றும் தென்னடாரை சேர்ந்த கருணாநிதி, நடராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Vedaranyam , Vedaranyam: An old woman who was poisoned due to the demolition of a native house near Vedaranyam is in critical condition at the hospital.
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்