×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஆதார், பான் கார்டு உள்பட 11 ஆவணங்கள் பட்டியல்: மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் பதிவேட்டில் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஒன்றிய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம். எனவே, ஆள் மாறாட்டங்களை தவிர்க்க மேற்காணும் அடையாள ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

Tags : State Election Commission , List of 11 documents including Aadhar, Ban card for voting in urban local body elections: State Election Commission released
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு