×

இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 3 மாதத்தில் மட்டும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது இந்தியாவிலேயே அதிகமாகும். கேரளாவில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலமும், கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களிலும் வாக்காளர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதன்மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்து உள்ளதாக கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் கூறினார். கடந்த 3 மாதங்களில் கேரளாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடையே உள்ள இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 77,176 ஆக இருந்தது.

கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,88,533ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை உள்ள கணக்கின்படி இளம் வாக்காளர் எண்ணிக்கை 3,88,981 ஆக உயர்ந்து உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 3 மாதங்களுக்குள் 3,11,805 இளம் வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். சராசரி அடிப்படையில் இது இந்தியாவிலேயே மிக அதிகமாகும். இவர்கள் அனைவரும் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,India ,Thiruvananthapuram ,State Election Commission ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது