×

துடியலூர் அருகே மின் வேலியில் சிக்கி காட்டு யானை பலி

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை அருகே வரபாளையத்தில் மனோகர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு வாழை பயிரிட்டுள்ளார். வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க மின்சார வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பொன்னூத்து அம்மன் கோவில் வன பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த ஆண் யானை ஒன்று மனோகரன் தோட்டத்தில் அமைத்திருந்த மின் வேலியை தாண்ட முயன்றபோது  மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. உடன் வந்த 2 குட்டி மற்றும் பெண் யானை சற்று தள்ளி அங்கும் இங்கும் சென்று சத்தம் எழுப்பியபடி காலை வரை அப்பகுதியிலேயே நின்றிருந்தன. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் வந்து விரட்டியபின் அவை காட்டுக்குள் சென்றன.

பிரேத பரிசோதனைக்கு பிறகு பொக்லைன் இயந்திரத்தில் பெல்ட் கட்டி வனப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு யானையின் உடல் புதைக்கப்பட்டது. பலியான இந்த ஆண் யானையும் அந்த பகுதியில் 2  குட்டி மற்றும் பெண் யானையுடன் குடும்பமாக சுற்றி வந்துள்ளது. மாதத்திற்கு 2 அல்லது 3 முறை இந்த பகுதியில் வரும்போது தொட்டிகளில் வைக்கப்படும் தண்ணீரை குடித்துவிட்டு எதையும் சேதப்படுத்தாமல் சென்று விடுமாம். ஊருக்குள் வந்தால் கூட வனத்துறையினர் டார்ச் வெளிச்சத்தை அடித்து போடா... போடா.. என்று குரல் எழுப்பினால் அமைதியாக காட்டு பகுதிக்குள் சென்று விடுமாம். இந்த யானை உயிரிழந்தது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tudiyalur , Wild elephant killed by electric fence near Tudiyalur
× RELATED தோப்பில் 800 கிலோ பாக்கு திருடிய 2 பேர் கைது